Tuesday, 6 May 2008

பிள்ளையான்களை - நிராயுதபாணிகளாக்குமாறு வழக்குத் தாக்கல:

கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் குழுவினரை நிராயுதபாணிகளாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் நிராயுத பாணிகளாக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர், பாதுகாப்பு செயலாளர், காவல்துறை மா அதிபர், கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிகாவல்துறை மா அதிபர் எச்.எம்.டி ஹேரத் ஆகியோருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மனுவை சட்டத்தரணி ஸ்ரீறால் லக்திலக்க தாக்கல் செய்துள்ளார்.

No comments: