கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஜே.வீ.பீயினர் தாக்கப்பட்டதாக கூறி ஜே.வீ.பீ இன்று அம்பாறை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
அக்கரைப்பற்று திருகோயில் பிரதேசத்தில் ஜே.வீ.பீயின் உறுப்பினர்கள் மீது நேற்று மாலை 3.30 அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதம் தாங்கிய பிள்ளையான் குழுவின் ஆதரவாளர்கள் தமது உறுப்பினர்களை தாக்கியதாக ஜே.வீ.பீயின் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி தெரிவித்தார்.
ஜே.வீ.பீ உறுப்பினர்கள் நேற்று திருகோயில் பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற பிள்ளையான் குழுவினர் தமது உறுப்பினர்களை தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜே.வீ.பீயின் பிரசார துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்த தமிழ் இளைஞர் ஒருவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிள்ளையானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை எடுத்துச் சென்ற சுமார் 20 பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஜே.வீ.பீ உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிள்ளையான் அரசாங்க தரப்பு வேட்பாளர் என்ற நிலையில் இந்த தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனவும் நிஹால் கலப்பத்தி குறிப்பிட்டார்.
Tuesday, 6 May 2008
பிள்ளையான் குழு தாக்குதல்: ஜே.வீ.பீ: அம்பாறையில் ஆர்ப்பாட்டம்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment