பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை ஓர் சட்டவிரோதமான அமைப்பாக பிரகடனம் செய்ய பிரித்தானியாவும், கனடாவும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கண்காணிப்பு கூட்டத் தொடரின் போது இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால், பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையகத்தில் அங்கீகரிக்கப்ட்ட ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இலங்கை குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இலங்கை மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் பிள்ளையான் குழு ஓர் ஆயுதந்தரித்த சட்டவிரோத குழுவாக சித்தரிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.
இலங்கையின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாடும் தலையிடக் கூடாதென இலங்கைக் குழு கூட்டத்தொடரின் போது கோரிக்கை விடுத்ததாக திவயின தெரிவிக்கின்றது.
பிள்ளையானைத் தொடர்பு படுத்தி இலங்கைக்கு அவதூறு ஏற்படுத்த ஜெனீவா மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Monday, 19 May 2008
பிள்ளையான்குழு சட்ட விரோதமானதென நிரூபிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி-திவயின
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment