Monday, 19 May 2008

முகமாலையில் சிறிலங்காப் படையினரின் நிலைகள் மீது திடீர் தாக்குதல்: ஒருவர் பலி- 8 பேர் காயம்

யாழ். வட போர்முனையான முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் நிலைகள் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

படையினரின் நிலைகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலிலேயே படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர்.

No comments: