அரசியல் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை விளிம்பில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சுதந்திரம் மற்றும் சுதந்திரம் அற்ற நாடுகளுக்கிடையில் இலங்கை இருப்பதாக சுதந்திர இல்லம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரம் உள்ள நாடுகளில் இந்தியா உள்ளடக்கப்பட்டுள்ளது. மனித உரிமை அறிக்கைகளில் ‘மிகவும் மோசமான நாடுகள்’ எனும் தலைப்பிலான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மிகவும் மோசமான எட்டு நாடுகளின் பட்டியலில் மியன்மார், வடகொரியா, கியூபா, லிபியா ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ஓரளவு சுதந்திரமான நாடென அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த பாகிஸ்தான் அண்மையில் அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலைத்தொடர்ந்து சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கை அரசியல் உரிமைகளில் 4வது இடத்திலும், சிவில் உரிமைகளில் 4வது இடத்திலும் உள்ளது.
No comments:
Post a Comment