உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக ரத்தொட்டை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப் பொருள் பாவனை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு பெண் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதும், அப்போதைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.
தற்போது பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி மெகாதி பெரேராவிடம் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரக்கோன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
Monday, 5 May 2008
பாலியல் பலாத்காரம் மேற்கொண்டமை தொடர்பாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment