Monday, 5 May 2008

கல்கிஸ்ஸவில் உள்ள வீடுகளில் வசிப்போர் மீது இராணுவபடைவீரர்கள் சிலர் தாக்குதல்

கல்கிஸ்ஸ டெரன்ஸ் வீதியில் அமைந்துள்ள சில வீடுகளில் வசிப்போர் மீது இராணுவப்படையினர் மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

தெஹிவளை மிஹிது மாவத்தையில் அமைந்துள்ள இராணுவ காவலரணில் கடமையாற்றும் இராணுவப் படைவீரர்களே இந்த அமனுஸ்ய தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சிவில் உடையில் வந்த எட்டு இராணுவப்படை வீரர்கள் வீட்டிலிருந்து பெண்கள், இளைஞர்கள் மற்றும் வயோதிபர்களை கடுமையாக தாக்கியதாக வீடுகளைச் சேர்ந்தோர் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த மே 1ம் திகதி இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் குறித்த பிரதேசத்தில் நடமாடிக் கொண்டிருந்ததை அவதானித்த வீட்டு உரிமையாளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கோரியதனால் கோபமுற்ற இராணுவ வீரர் தமது சகாக்களையும் அழைத்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.

No comments: