Monday, 5 May 2008

அம்பாறை அக்கரைப்பறறில் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில்:

அக்கரைபற்று வலய கல்வி பிரிவில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதால், அந்த பாடசாலைகள் இன்று மூடப்பட்டதாக நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு முறையிட்டுள்ளது.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்து கொள்ளும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொள்ள செய்வதே இதற்கான காரணம் என அந்த அமைப்பின் பேச்சாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

இந்த நிலையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவில்லை என வலய கல்வி அலுவலகத்தில் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டங்களில் பாடசாலை அதிபர்களும், மௌலவிகள் மாத்திரமே கலந்துகொண்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

No comments: