Monday, 5 May 2008

பிள்ளையான்கள்: பிரம்புகளால் மாடுகள் மேய்ப்பவர்கள் அல்ல: ஜே.வீ.பீ:

பிள்ளையான் தரப்பினர் பிரம்புகளை கொண்டு மாடுகளை மேய்ப்பவர்கள் அல்ல, அதனை விட நவீன ஆயுதங்களை கொண்டுள்ளவர்கள் என ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் பிள்ளையான் குழுவினர் முகாம்களை அமைத்து ஆயுதங்களை கொண்டுள்ளனர்.

இவர்கள் பிற்பகல் 4 மணியின் பின்னர் அரசாங்கம் வழங்கியுள்ள உழவு இயந்திரங்களில் சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவிததார். இதனால் பிள்ளையான் குழுவினர் பிரம்புகளை கூட வைத்திருக்கவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுவது பாலர் பாடசாலை உற்சவத்தை போன்றது.

எனவும் அவர் கூறினார். அரசாங்க அமைச்சர்கள், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரை தவிர ஏனைய அனைவருக்கும் தேர்தல் சட்டவிதிமுறைகள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுதந்திரக் கூட்டமைப்பின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறையினர் கண்களை மூடி கொண்டிருப்பதாகவும் அனுரகுமார குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண தேர்தலில், அந்த பிரதேச மக்கள் தமது பிரதிநிதிகளை நியாயமாகவும் சுதந்திரமாக தெரிவு செய்ய உள்ள வாய்ப்புகளை இல்லாமல் செய்து, விடுதலைப்புலிகளோ அல்லது வேறு பயங்கரவாத அமைப்பினரோ மீண்டும் முனைப்புகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

திருகோணமலை போன்ற வன்முறை குறைந்த பிரதேசங்களில் அரசாங்கத்தினால் வன்முறைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

1988ஆம் ஆண்டுக்கு பின்னர் கிழக்கு மாகாண மக்களுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எனினும் அரசாங்கம் தனது அரசியல் நோக்கததிற்காக கிழக்கு மாகாண மக்கள் மீது இந்த மாகாண சபை தேர்தலை பலவந்தமாக சுமத்தியுள்ளதாக அனுரகுமா திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: