Monday, 5 May 2008

முகமாலையில் படையினரின் முன் நகர்வு முறியடிப்பு - புலிகள் அறிவிப்பு!

முன்னரங்கில், முகமாலை ஊடாக இலங்கை இராணுவம் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி,விடுதலை புலிகளால் முறியடிக்கபட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இதில் 8 படையினர் கொல்லபட்டுள்ளதாகவும், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும்,படை தரப்பை சேர்ந்த ஒருவரின் உடல் கைப்பற்றபட்டுள்ளதாகவும் விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பின்தளங்களில் இருந்து சரமாரியான பல்குழல் பீரங்கி மற்றும் ஆட்டிலெறி எறிகணைகளின் பக்க ஆதரவுடன் இன்று முற்பகல் 10:00 மணியளவில் முகமாலையில் உள்ள விடுதலை புலிகளின் காவலரண்கள் மீது படையினர் தாக்குதலை தொடுத்திருந்தனர்.இதேவேளை இடம்பெற்ற முறியடிப்பு தாக்குதலில் ஒரு சில ஆயுதங்களையும் படையினரிடமிருந்து கைப்பற்றி உள்ளதாக விடுதலை புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்

No comments: