Monday, 5 May 2008

பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பதவி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படும் சாத்தியக் கூறுகள்

தமிழ்,சிங்கள புத்தாண்டின் பின்னர் நாளை கூடவிருக்கும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பதில் பாராளுமன்ற உறுப்பினரின் நியமனம் குறித்த சர்ச்சை எழுப்பப்பட்டு, குழப்பம் ஏற்படுத்தப்படலாமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக 14 நாட்களுக்கு நியமிக்கப்பட்ட தம்மிக்க கித்துல்கொடவின் பதவிக்காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் நாளை நடவடிக்கை எடுக்கும். இந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பதில் பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க கித்துல்கொடவின் பதவியை மேலும் நீடிப்பது தொடர்பான தீர்மானம் எதுவும் தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லையென சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.

பதில் பாராளுமன்ற செயலாளரின் பதவி நீடிப்புக்கு எதிராக ஜே.வி.பி.யினரும் சபையில் போராட்டம் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: