Thursday, 15 May 2008

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவின் அண்மைய லண்டன் விஜயத்தின் போது கருணாவை சந்தித்தாரா???

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவின் அண்மைய லண்டன் விஜயம் வெறுமனே ஒக்ஸ்போட் பல்கலைக்கழக உரை மட்டும் அல்ல எனவும் கருணா தொடர்பான விடயங்களிலும் அக்கறை கொண்டிருந்தார் எனவும் பெயர் குறிப்பிடவிரும்பாத லண்டன் முக்கியஸ்த்தர் தெரிவித்தார்.

அந்த வகையில் இலங்கைப் படையினர் மன்னாரில் 1 வருடத்திற்கு மேல் விடுதலைப்புலிகளின் பாரிய எதிர்ப்புக்களை சந்திக்கும் நிலையில் வன்னிக் களமுனையின் திறவுகோலாக கருணாவை அரசாங்கம் பயன்படுத்தவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கினறன.


கிழக்கில் பிள்ளையானின் ஆதிக்கம் ஓங்கியுள்ள நிலையில் மீண்டும் அங்கு கருணா செல்வது முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்பதாலும், வன்னியில் கடந்த ஜெயசிக்குரு நடவடிக்கையில் படையினரை நிலைகுலைய வைத்த முக்கிய களமுனைகளுக்கு கருணா தலமைதாங்கினார் என்பதாலும் அவரை அங்கேயே களமிறக்க ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலரும் விரும்புவதாக கூறப்படுகிறது.


அதனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இப்போ முரண்பாடுகளும் உடன்பாடுகளாக மாற்றம் பெற்றிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவை உண்மையா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

source:globaltamilnews

No comments: