Friday, 16 May 2008

கப்பல் மூழ்கடிப்புடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியினுடைய சிம்காட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கடற்படையினரால் இன்வென்சிபல் கப்பலை மூழ்கடித்த விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரிக்கு கடைசியாக லண்டன் மற்றும் கிளிநொச்சியிலிருந்து தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய


வருகிறது. இதுதொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டு வரும் விசாரணைக்குழு கடற்படையின் சுழியோடிகளைக் கொண்ட பரிசோதனைகளின் போது மேற்படி கப்பல் மூழ்கடிப்புடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியினுடைய சிம்காட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இச்சிம்காட் குறித்து விசாரணைகளை நடத்திய மேற்படி விசாரணைக்குழு தற்கொலை குண்டுதாரிக்கு லண்டன் மற்றும் கிளிநொச்சியிலிருந்து தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது .


கப்பல் மூழ்கடிப்பதற்கு முன்னர் தற்கொலை குண்டுதாரி திருகோணமலை துறைமுகத்தில் பணியாளராக பணியாற்றியுள்ளாரா? என்பதில் விசாரணைக்குழுவின் கவனம் திரும்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: