பசி எனக்கூறி வீடொன்றுக்கு சென்ற முதியவர் ஒருவர் அங்கிருந்த தம்பதியருக்கு கருஞ்சீரகத்தை இடித்து தூளாக்கி கொடுத்து விட்டு பணம் மற்றும் சங்கிலியை அபகரித்து சென்ற சம்பவமொன்று புத்தளம் பகுதியில் இட்மபெற்றுள்ளது.
picture:Imagination only
புத்தளம் மேற்கு உப்பளம் வீதி இரண்டாம் ஒழுங்கையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது
இப்பகுதியில் வசிக்கும் மேசன் தொழிலாளி ஒருவரது வீட்டுக்கு சென்ற சுமார் 75 வயது மதிக்கதக்க முதியவரொருவர் தமக்கு மிகவும் பசியென கூறி உணவு கேட்டார்
என்றும் பரிதாபப்பட்ட வீட்டாரும் அவருக்கு உணவு வழங்கி உபசரித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது உணவு உண்டு முடிந்த முதியவர் சற்று உடல்நலக் குறைவான மேசன் தொழிலாளியிடம் நான் உங்களுக்கு மருந்து செய்து தருகிறேன் எனக்கூறி கருஞ்சீரகம் தருமாறும் கேட்டு பெற்றுக் கொண்ட இவர்
அதை இடித்து தூளாக்கி மேசன் தொழிலாளிக்கும் அவரது மனைவிக்கும் கொடுத்தார் என்றும் அதைப் பருகிய அந்த தம்பதியினர் உடனடியாக மயக்கமடைந்து விட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது
இச்சம்பவத்தை பயன்படுத்திய முதியவர் மேசன் தொழிளாலியின் சட்டைப்பைக்குள் இருந்த 200 ரூபா பணத்தையும் மனைவியின் கழுத்தில் இருந்த சுமார் ஒருபவுண் மதிக்கதக்க சங்கிலியையும் அபகரித்து கொண்டு தலைமறைவாகி விட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது இச்சம்பவம் குறித்து புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Friday, 16 May 2008
கருஞ்சீரகம் கொடுத்து பணம், நகை, கொள்ளை - பசி எனக்கூறி வீடொன்றுக்கு சென்ற 75வயது முதியவர் கைவரிசை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment