வவுனியா பஸார் வீதியில் இன்று 11.10 மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் சிறுவர்கள். 6 பேர் பெண்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் யாரால் யாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்ற விபரங்கள் இதுவரை வெளியாக வில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
source:குளோபல் தமிழ்செய்தி
Friday, 16 May 2008
வவுனியா கைக்குண்டு தாக்குதலில் 17 பேர் காயம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment