ஆலங்குளம் 35 ஆம் வாய்க்கால் பகுதியிலேயே இவரது சடலம் நேற்றுக் காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது. நேற்று முன்தினமிரவு வாடகைக்குச் சென்ற ஆட்டோவின் சாரதியே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலத்திற்கு அருகில் ஆட்டோவும் காணப்பட்டது. அக்கரைப்பற்று ஜின்னா வீதியைச் சேர்ந்த அன்சார் அக்பர் நிலார் (25 வயது) என்ற ஆட்டோ சாரதியே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் பின்னர் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அக்கரைப்பற்று ஆலங்குளம் பகுதியில் பலத்த அடிகாயங்களுடன் ஆட்டோ சாரதியொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Saturday, 17 May 2008
அடிகாயத்துடன் ஆட்டோ சாரதியின் சடலம் அக்கரைப்பற்றுப் பகுதியில் கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment