
கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்களின் உரிமையாளர் பிள்ளையான் குழுவின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது. ஜனா என்ற இந்த தமிழர் நேற்று மாலை திருகோணமலையில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நபர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினர் என சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த உந்துருளி கிழக்கு மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டது என்ற அடிப்படையில், இடம்பெற்ற விசாரணையின் போது உரிமையாளர் திருகோணமலையை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனையடுத்து நேற்று கொழும்பில் இருந்து சென்ற விசேட காவல்துறை குழுவினர், உரிமையாளரை கைதுசெய்து கொழும்புக்கு அழைத்து வந்தனர். இவர் விசேட தேவையை கொண்ட ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இவரின் தாய் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரை காவல்துறையினர் திருகோணமலையில் தடுத்து வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு கோட்டையில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் காவல்துறையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறை பேரூந்து ஒன்றை இலக்கு வைதது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 95 பேர் காயமடைந்தனர்.
source:குளோபல் தமிழ்செய்தி
Saturday, 17 May 2008
கொழும்பு குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்களின் உரிமையாளர் பிள்ளையான் குழுவின் உறுப்பினர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment