கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்காக 37 பிராடோ வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. சுங்கதீர்வையற்ற வகையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த வாகனம் ஒன்றின் பெறுமதி 25 லட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. இதனை தவிர முன்னர் மாகாண சபை செயலகத்தை திருத்தியமைத்து மாகாண சபை அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இதற்கான தளபாடங்களை கொள்வனவு செய்ய 50 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
source:குளோபல் தமிழ்செய்தி

No comments:
Post a Comment