Tuesday, 27 May 2008

கிழக்கை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமே கல்வியமைச்சு முதலமைச்சரின் கீழ் கொண்டு வரப்படாததன் நோக்கம்

* புத்திஜீவிகள், கல்விமான்கள் அதிருப்தி

கிழக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சு ஏனைய மாகாணங்களில் உள்ளதுபோல், முதலமைச்சரின் கீழ் கொண்டு வரப்படாது தனியான அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து புத்திஜீவிகளும் கல்விமான்களும் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

இது கிழக்கு மாகாணத்தை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளில் ஒரு அங்கம் எனத் தெரிவித்துள்ள புத்திஜீவிகள், இதற்கு முன்னோடியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இம்மாகாணத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமின்றி, பாடசாலைகள், கல்வித்துறை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தமிழ்மொழி பேசும் பெரும்பான்மையினராக இருக்கையில், எல்லாவற்றுக்கும் மேலாக கல்வித்துறைசார் நிர்வாகம் கூட தமிழ்மொழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அதன் அமைச்சரும் செயலாளரும், சிங்களமொழி பேசுவோரில் இருந்து நியமிக்கப்பட்டிருக்கின்றமை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். ஏனைய ஏழு மாகாண சபைகளிலும் அங்கு பெரும்பான்மையாக உள்ளவர்களிலிருந்து முதலமைச்சரும் அவரின் நிர்வாகத்தில் கல்வி அமைச்சும் கொண்டுவரப்பட்டிருக்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டும் ஏன் இந்த நிலைமையெனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

No comments: