யாழ்ப்பாணம், மீசாலை மேற்கு காளிகோயிலடியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தமக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி, இன்று வெள்ளிக்கிழமை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளனர்.
42 வயதுடைய குடும்பத் தலைவரும், 39 வயதான குடும்பத் தலைவியும், அவர்களது 4 பிள்ளைகளுமே இவ்வாறு சரணடைந்துள்ளனர்.
இதற்கிடையில், இலங்கை இராணுவத்தினர், பொலிஸார், யாழ் மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த களியாட்ட நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.
கடுமையான சோதனைகளின் பின்னரே பொது மக்கள் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது.

No comments:
Post a Comment