Friday, 23 May 2008

முதலமைச்சர் பிள்ளையான், ஹிஸ்புல்லா ஆகியோர் காத்தான்குடியில் மக்கள் மத்தியில் உரை

கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் காத்தான்குடி மக்கள் மத்தியில் இன்றைய தினம் உரையாற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற கசப்பான சம்பவம் குறித்து தமது அதிருப்தியை தெரிவிப்பதாகவும், பொறுமையுடன் செயலாற்ற வேண்டும் எனவும் இருவரும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10,000ற்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.

பயங்கரவாத்தை இல்லாதொழித்து ஜனநாயக நீரோட்டத்தில் வெற்றிநடைபோட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையிலான எந்தவொரு செயற்பாட்டிற்கும் தாம் இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காத்தான்குடியில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து சமாதானமாக செயற்பட மக்கள் திடகங்கற்பம் பூண வேண்டும் என பிள்ளையான் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, வழமை போன்று தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமென மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.


வழமைபோன்று நாளை முதல் கடைகள் திறக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி தலைவர் சாந்தன் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையின் காரணமாக 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

No comments: