Saturday, 3 May 2008

இலங்கை அரசாங்கத்தின் மிஹின் எயார் வானுர்தியின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன

இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் இயங்கும் மிஹின் எயார் வானூர்தி, காலவரையன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஹின் எயார் ஏற்கனவே சுமார் பில்லியன் ரூபா அளவில் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பிரச்சினையை அடுத்து, குறித்த வானூர்தி நிறுவனத்தின் தலைவர் சசின் குணவர்த்தன பதவிவிலகியுள்ளார்.

இதனை அடுத்து நிறுவனத்தின் பீஜிங் முகாமையாளர் ஜெயசீலன் அழைக்கப்பட்டு தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதேவேளை 19 வருடங்கள் பழமைவாய்ந்த வானுர்தி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சேவையை மேற்கொள்ள மிஹின் எயார் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும் இலங்கை வானுர்தி சட்டத்தின்படி 19 வருடங்கள் பழமை வாய்ந்த வானூர்தியை பதிவு செய்யமுடியாது என்பதால் அந்த முனைப்பு கைவிடப்பட்டது.

full detail in english:http://esoorya.blogspot.com/2008/05/mihin-grounded-until-further-notice.html

1 comment:

ttpian said...

if the flight service of Mihin stops,then,how Mahindha will bring in death boxes from china to pack srilankan soldiers?
Sea route?