அரசாங்கம் விரைவில் சமதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணசபைத்தேர்தலின் பின்னர், நோர்வே ஏற்பாட்டாளர்களின் முயற்சிகளுக்கு இணக்கத்திற்கான சமிஞ்சையை காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க தரப்பு தகவல் ஒன்றின்படி நோர்வேயின் விசேட தூதர் ஜோன் ஹன்சன் பௌவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். தமிழக சட்டசபையில், ஆளும் திராவிட முன்னேற்றக்கழகம் உட்பட்ட கட்சிகள், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவும் இலங்கைப்படையினருக்கு எதிராகவும் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியுள்ளமை, தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்பப்படும் குரல்கள் வலுப்பெற்று வருகின்றமை, அரசாங்கம் தொடர்பாக சர்வதேசம் வெளியிட்டுவரும் கடுமையான விமர்சனங்கள் முதலான காரணங்களை அடுத்தே அடுத்தே இலங்கை அரசாங்கம், இந்த முனைப்பை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment