பிள்ளையான் குழு பிளவுபடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது.
பிள்ளையான் குழுவைச் சேர்ந்த பாரதீ உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து விலகிச் செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. புதிய அரசியல் பிரவாகமொன்றை ஏற்படுத்துவதைவிடுத்து கிழக்குவாழ் தமிழர்களிடம் கப்பம் பெறல் மற்றும் வன்முறைகளில் பிள்ளையான் குழு ஈடுபட்டு வருவதாக பாரதீ குழு குற்றஞ்சாட்டுகிறது.
பிள்ளையான் குழுவினர் பிரதேசத்தில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் பாரதீ குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அடக்கு முறை, கப்பம் பெறல், கடத்தல் போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவது நியாயமாகதென பாரதீ குழு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Sunday, 4 May 2008
பிள்ளையான் குழு பிளவுபடும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment