சிங்கள நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமுகமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து அரிசியை கொழும்புக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகநுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த அரிசி தொகையை இன்று அல்லது நாளைய தினத்திற்குள் கொழும்புக்கு கொண்டு வர எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தற்போது அந்த பகுதியில் மேலதிகமாக அறுவடை செய்யப்பட்டதுடன் தேவைக்கு அதிகமான அரிசி அங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ அரிசியை 59 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த அரிசியை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment