கிழக்கு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேண்டுகோளை தமிழ் மக்கள் நிறைவேற்றியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். |
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிழக்கு பிரதேச மக்கள் அரசாங்கத்தை இந்த தேர்தலில் தோற்கடித்துள்ளனர். ஆனால், ஜனநாயகத் தேர்தல் என்று கூறிக்கொண்டு சர்வாதிகார தேர்தல் மூலம் கிழக்கு மாகாணத்தில் 61 விழுக்காட்டினர் வாக்களித்ததாக காட்டப்பட்டாலும், உண்மையில் தமிழ் மக்களில் 40 விழுக்காட்டினருக்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளனர். திருகோணமலை மாவட்ட மக்களும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தொகுதி மக்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்புத் தொகுதி மக்களும் அரசாங்கத்தை முழுமையாக நிராகரித்துள்ளனர். பட்டிருப்புத் தொகுதியில் வெற்றிலையில் போட்டியிட்டவர்களுக்கு 14,379 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதேவேளை அரசுக்கு எதிராகப் போட்டியிட்ட ஏனைய கட்சிகளுக்கு 13,900 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இதன்படி பட்டிருப்புத் தொகுதியில் 3,000 வாக்குகளால் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. இதனைவிட பட்டிருப்புத் தொகுதி தனித்தமிழர்களின் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் ஆளும் தரப்பில் இருந்தோ, எதிர்தரப்பில் இருந்தோ கிழக்கு தேர்தலில் எந்த ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்படவில்லை. இதன் மூலம் பட்டிருப்புத் தொகுதி வாழ் தமிழ் மக்கள் கிழக்கு சபையை முழுமையாக நிராகரித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது. எனவே, இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய எமது வேண்டுகோளை ஏற்று அரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை இந்த தேர்தல் புள்ளி விபரங்கள் தெளிவாகக் காட்டுவதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Wednesday, 14 May 2008
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை தமிழ்மக்கள் நிறைவேற்றியுள்ளனர்: பா.அரியநேத்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment