Thursday, 22 May 2008

பால்ராஜின் மறைவைக்குத் துக்கம் அனுஸ்டிக்கும் வகையில் வவுனியாவில் கடையடைப்பு பாடசாலைகள் அலுவலகங்கள் இயங்கவில்லை

நகரில் இன்று காலை கடைகள் திறக்கப்படவில்லை. பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் வீதிகளில் காணமுடியவில்லை. காலையில் நெரிசல் மிகுந்து காணப்படும் நகர வீதிகள் வாகன ஓட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை மாரடைப்பினால் காலமாகிய விடுதலைப் புலிகளின் முக்கிய மூத்த இராணுவ தளபதிகளில் ஒருவராகிய பிரிகேடியர் பால்ராஜின் மறைவைக்குத் துக்கம் அனுஸ்டிக்கும் வகையிலேயே இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது,

பால்ராஜின் மறைவையடுத்து, வன்னிப்பிரதேச்த்தில் இன்று வெள்ளிக்கிழமை வரையிலான 3 தினங்கள் துக்கம் அனுஸ்டிக்கப்படுகின்றது என்பது குறி;ப்பிடத்தக்கது.

இராணுவத்திற்கு எதிரான பல்வேறு பெரும் தாக்குதல் நடவடிக்கைகளில் முதன்மை நிலையில் இருந்து செயற்பட்டு விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிகள் பலவற்றிற்கு பால்ராஜ் ஆதாரமாகமத் திகழ்ந்தவர் என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுத்துள்ள இரங்கற் செய்தியில் தெரிவி;ககப்பட்டுள்ளது, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் பால்ராஜின் செயற்பாடுகள் குறித்து புகழாரம் சூட்டி செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

No comments: