
வவுனியாவில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நெலுக்குளம் கணேசபுரம் பகுதியில் இனம் தெரியாதோரால் சுடப்பட்ட இவர் 60 வயதுடைய பழனியாண்டி பெரியப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 12.30 அளவில் அவரது வீட்டுக்குச் சென்ற ஆயுததாரினள் அவரை வெளியே அழைத்து சுட்டுக்கொன்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வயோதிபர் சுடப்பட்டதற்கான காரணங்கள் வெளிவரவில்லை. வவுணியாவில் அதிகரித்து வரும் கொலை,ஆட்கடத்தல், கொள்ளை முதலான குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அண்மையில் மாவட்ட நீதிமன்ற நீதவான் இழஞ்செழியன் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
source:குளோபல் தமிழ்செய்தி
Thursday, 22 May 2008
வவுனியா நெலுக்குளம் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment