Friday, 9 May 2008

ஸ்ரீலங்கன் எயார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக மனோஜ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்

ஸ்ரீலங்கன் எயார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளராக மனேஜ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மனோஜ் குணவர்தன ஸ்ரீலங்கன் எயார் நிறுவனத்தில் 25 வருடம் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3200 மில்லியன் ரூபாய்க்கு அதிகமாக நட்டமேற்பட்டுள்ள மிஹின் எயர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக மனோஜ் குணவர்தனவின் சகோதரர் சஜித் வாஸ் குணவர்தன கடமையாற்றினார்.

இவர் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சிறீலங்கன் எயார்லைன்சின் பிராந்திய முகாமையாளராவும் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகள் தற்போது சஜித் வாஸ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 45 வீத பங்குகளை கொண்டிருந்த எமிரேட்ஸ் நிறுவனம் அண்மையில் முகாமைத்துவ உடன்படிக்கையில் இருந்து விலகி கொண்டது.

இதேவேளை மனோஜ் குணவர்தனவின் சகோதரர் சஜீன் வாஸ் குணவர்தன மிஹின் எயார் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கடமையாற்றுவதுடன், அவர் அண்மையில் அதில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.


சஜித் மற்றும் மனோஜ் குணவர்தன ஆகியோர் லங்கா புத்ர வங்கியின் தலைவராக கடமையாற்றிய வாஸ் குணவர்தனவின் புதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: