Friday, 9 May 2008

மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை - யு.என. வொச் அமைப்பு

மனித உரிமைகளின் பாதுகாப்பு பேரவையில் அங்கம் வகிக்க இலங்கைக்கு தகுதியில்லை என யு.என். வொச் உள்ளிட்ட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை, பாகிஸ்தான், செம்பியா மற்றும் பஹ்ரேனில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுவவருவதாக குறித்த அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

இதனால் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வழங்கப்படக்கூடாதென அரச சார்பற்ற அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெறுகின்ற போதிலும் சர்வதேச ரீதியில் குறித்த நாடுகள் அங்கீகரிக்கப்படுவதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

பஹ்ரேனைத் தவிர்ந்த ஏனைய மூன்று நாடுகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 27ம் திகதி 15 நாடுகளுக்கு அங்கத்துவம் வழங்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ள சந்தர்ப்பத்தில் இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: