Friday, 9 May 2008

சீனாவுடனான பேச்சுக்கள் தோல்வி: தலாய் லாமா தரப்பு அறிவிப்பு

திபெத் விவகாரம் குறித்து சீனாவுடன் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தலாய் லாமாவின் விசேட தூதுவர்கள் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு எதிராக திபெத்தில் நடந்த வன்முறை, சீனாவின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டது எனவும் அவர்கள் கூறினர்.

திபெத் விவகாரம் குறித்து தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் சீன அதிகாரிகள் கடந்த வார இறுதியில் பேச்சு நடத்தினர்.

மூன்று நாட்கள் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பேச்சு, தொடங்கிய சில மணி நேரங்களிலேயே எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

இந்நிலையில், அந்தப் பேச்சில் கலந்து கொண்ட தலாய் லாமாவின் பிரதிநிதிகள் லோடி கியாரி மற்றும் கெல்சங் ஆகியோர் தர்மசாலாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

பேச்சின் போது சீனா விதித்த நிபந்தனைகள் பலவற்றுக்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என அவர்கள் தெரிவித்தனர். அடுத்த சுற்று பேச்சு நடத்தலாம் என்பது மட்டும் இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்பாக அடுத்த சுற்றுப் பேச்சு நடத்தப்பட வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதற்கிடையே, பேச்சு தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமானால், உறுதியான நடவடிக்கைகளை தலாய்லாமா மேற்கொள்ள வேண்டும் என சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது

No comments: