பெரும்பான்மையை அரசுத் தரப்பு வளைத்துப் போடுவதற்காக கிழக்கு மாகாண சபையை ஒரு மாதம் இடைநிறுத்தவும் திட்டமிடப்பட்டிருந்ததாம்!
கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா தலைமையிலான குழுவினரின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில், கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைத்துவிட்டு மாகாணசபையின் கூட்டத்தொடரை ஒரு மாதகாலத்திற்கு ஒத்திவைப்பதற்குக் கூட ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான கிழக்கு மாகாண பிரசாரத்தில் முன்னணியில் செயற்பட்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
மாகாணசபை ஒத்திவைக்கப்படுவதன் மூலம் கிடைக்கும் கால அவகாசத்தை, சபையில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கான முயற்சிகளுக்குப் பயன்படுத்த ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார் எனவும் அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்
.நாளை அமைச்சராகப் பதவியேற்பார்
ஹிஸ்புல்லா எதிர்கொள்ளும் சிக்கலான நிலைமையை ஜனாதிபதி உணர்ந்துள்ளார் எனவும் இதன் காரணமாக அவருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய பல யோசனைகளை ஜனாதிபதி இப்போது முன்வைத்துள்ளார் எனவும் அந்த அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முஸ்லிம் மதத் தலைவர்கள் ஹிஸ்புல்லாவிற்கு வலியுறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் நாளை ஹிஸ்புல்லா மாகாணசபை அமைச்சராகப் பதவியேற்பதற்கான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டது
Monday, 19 May 2008
அரசுத் தரப்பு வளைத்துப் போடுவதற்காக கிழக்கு மாகாண சபையை ஒரு மாதம் இடைநிறுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment