Monday, 19 May 2008

உந்துருளி உரிமையாளருக்கும் தமது கட்சிக்கும் தொடர்பும் இல்லை: பிள்ளையான்

அண்மையில் கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை மேற்கொண்ட உந்துருளி உரிமையாளருக்கும் தமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

உந்துருளியின் உரிமையாளரான ஜனார்த்தனன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திருகோணமலையில் உள்ள கட்சி காரியாலத்தின் முக்கியஸ்தர் என வெளியான செய்திகளில் உண்மை இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இரண்டு பேர் ஜனார்த்தனன் என்ற பெயரில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புறக்கோட்டையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தம்மை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதென்பது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: