இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல் ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்படகின்றபோதும், அங்குள்ள மனித உரிமை நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
டோக்கியோவில் கடந்தவாரம் நடைபெற்ற ஜப்பான்-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் இறுதியில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஊடாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளை வரவேற்கின்றோம்;” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தனது முயற்சிகளை மேலும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படவேண்டியது அவசியமானது. ஏன அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானியப் பிரதமர் ஜசூவோ பக்கூடா, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உட்பட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment