முன்னாள் ஜனாதிபதி சந்தரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை அவர் மேற்கொள்ள உள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் இராணுவத் தீர்வில் மாத்திரம் ஆர்வம் கொண்டுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவின் காஸ்மீர் குறித்த கற்கை நெறிகளுக்கான மன்றத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் இப்போக்குக் காரணமாகவே இலங்கை நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சார்க் அமைப்பின் பல தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். காஸ்மீர் பிரச்சனை இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான விவகாரம் எனச் சுட்டிக்காட்டிய அவர் இலங்கைப் பிரச்சனை உள்விவகாரம் எனத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை மேற்கொள்ளத் தான் முயன்றார் எனவும், எனினும் தற்போதைய அரசு இராணுவத் தீர்வில் மாத்திரமே ஆர்வம் கொண்டுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
Tuesday, 27 May 2008
முன்னாள் ஜனாதிபதி சந்தரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment