Friday, 9 May 2008

அமைச்சர்கள் ரிஸாட்பதியுதீன், மற்றும் கே.ஏ பாயிஸ் ஆகியோர் மூதூரில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக முஸ்லீம்காங்கிரஸ் முறையிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் ரிஸாட்பதியுதீன், மற்றும் கே.ஏ பாயிஸ் ஆகியோர் மூதூரில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக முஸ்லீம்காங்கிரஸ் முறையிட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையாளர்டம் நேரடியாக முறையிட்ட கட்சியின் தலைவர் றவூவ்ஹக்கீம் குறித்த அமைச்சர்கள் தர்காநகர், பாலநகர், மற்றும் நரித்தீவு பகுதிகளில் வயோதிப பெண் உட்பட சிலரைத் தாக்கியதாகவும் வாக்காளர்களை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூதுர் பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சிரேஸ்ட்ட காவற்துறை அதிபரை கண்டு பிடிக்க முடியாமல் உள்ளதாக ஐக்கியதேசியக் கட்சி முறையிட்டுள்ளது.

இவர் இன்று வரை தனது கையடக்கத் தொலைபேசியை இயக்க மறுப்பதாக தெரிவித்துள்ள ஐ.தே.க பிரதேசத்தில் நடக்கும் தேர்தல் வன்முறைகள், அதில் அமைச்சர்களும் அவர்களது அடியாட்களும் சம்பந்தப்படுகின்றமை என்பவற்றை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் இல்லை என தெரிவித்துள்ளது.

அத்துடன் அரசாங்கம் திட்டமிட்டே இந்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஐக்கியதேசியக் கட்சி முறையிட்டுள்ளது.

No comments: