ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (May 13) பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர் பேரவை கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இதற்காக வேண்டி மஹிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் (May 11) பிரித்தானியாவிலுள்ள இலங்கை மாணவர் பேரவையின் அழைப்பின் பேரில் லண்டன் வந்துள்ளார். ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து இன்றிரவு இராப்போஸண விருந்தொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
கிழக்கில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாகவும் வடக்குக்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்யப் போவதாகவும் 200,000 தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் இலங்கை ஜனாதிபதி உரையாற்ற உள்ளார். பிரித்தானியாவில் மிகவும் பலமான தமிழ் சமூகம் இருந்த போதும் காளான்களாக பல தமிழ் அமைப்புக்கள் உருவாகி உள்ள போதும் ஜனாதிபதியின் வருகைக்கு எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு செயலாளர் பாலித கொஹன மற்றும் சஜித் வாஸ் குணவர்தன ஆகியோர் ஜனாதிபதியுடன் விஜயம் செய்துள்ளனர். அதேநேரம், வெளிநாட்டு அமைச்சர் ரோஹித போகொல்லாகம நிவ்யோர்க் நகரிலிருந்து வருகை தந்து இக்குழுவுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் உரையை செவிமடுப்பதற்காக வேண்டி லண்டன் நகரிலிருக்கும் இலங்கை மாணவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் செல்வதற்காக வேண்டி இலங்கைத் தூதரகாலயம் 2 பஸ் வண்டிகளை ஏற்பாடு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் (ஆயல 15) நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுவாக யுத்தக் கொடுமைகள், இன அழிப்புகள், மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு வரவேற்கப்படும் போது அதற்கு எதிரான அடையாள எதிர்ப்பு காட்டப்படுவது வழமை.
ஆனால் அரசியல் ரிதியாகவும் பலமாக உள்ள பிரித்தானிய தமிழ் சமூகம் இலங்கை அமைச்சர்கள் சர்வதேச அரங்கிற்கு வரும் போது பெரும்பாலும் அடையாள எதிர்ப்பை தெரிவிப்பதில்லை. சர்வதேச அரங்கிற்கு வரும் இலங்கை அரச பிரதிநிதிகள் எவ்வித எதிர்ப்பும் இடைஞ்சலும் இல்லாமல் வந்து போகக் கூடியதாக உள்ளது.
ஆனால் கேள்வி நேரத்தில் இடதுசாரி போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மாணவர்களின் நெருக்கடியான கேள்விகளுக்கு ஜனாதிபதி ஆளாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் வருகைக்கு இடதுசாரி மாணவர்கள் எதிர்ப்பு :
கிழக்கிலங்கை தேர்தல் சூடு ஆற முதல் ஜனாதிபதி அவசரஅவசரமாக இங்கிலாந்து வந்திருப்பது ஏன்?
இலங்கை அரசு உலகெங்கும் முடுக்கிவிட்டுள்ள பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவரது ஆக்ஸ்போட் வருகையும் அமைந்துள்ளது.
பணக்கார மற்றும் மத்தியதரவர்க்க மாணவர் பெரும்பான்மையாக இருக்கும் ஆக்ஸ்போட் யூனியனில் தன்புகழ் பாட இரண்டு நாள் பறக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதிக்கு யூனியனில் இருக்கும் இடதுசாரி - மனிதஉரிமை மாணவர்களிடம் இருந்து ஏற்கனவே எதிர்ப்பு கிளம்ப தொடங்கிவிட்டது.
இலங்கையில் ஜனநாயகம் பூத்து மலர்கிறது. பொருளாதார ரீதியாக இலங்கை முன்னோக்கி பாய்கிறது. கிழக்கில் சனம் ஜனநாயக காத்தை சுவாசிக்க தொடங்கிவிட்டார்கள். இனி இந்த காத்து வடக்குக்கும் வீசும். இதுவே இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்கும் வழி.
என்ற சுருக்கமான பினாத்தலை விலாவாரியாக அவர் அளந்து செல்வதை நாம் பார்த்து கொண்டிருக்க போவதில்லை என அறிவித்துள்ள ஆக்ஸ்போட் மாணவர்கள் உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு துணைபோகும் ஜனாதிபதிக்கு ஆப்பு வைக்கிறமாதிரி சுடச்சுட கேள்விகளுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
உறுப்பினர்கள் மட்டுமே பங்குபற்றகூடிய இந்த உரையாடலில் ஜனாதிபதிக்கு ஆதரவு சேர்க்க இலங்கை தூதராலயம் லண்டனில் இருந்து ஆட்சேர்க்க முடிவுசெய்துள்ளது.
கிடைத்த குறுகிய காலப் பகுதியில் ஆக்ஸ்போட் மாணவர்கள் பல தமிழ்-மனித உரிமை அமைப்புக்களை எதிர்போராட்டத்திற்கு அழைத்திருந்தும் எந்த அமைப்புக்களும் முன்வராத பட்சத்தில் அவர்கள் பல்கழைக்கழக மனித உரிமை அமைப்புக்களை இணைத்து எதிர் நடவடிக்கைகலில் இறங்கியுள்ளார்கள்.
இப்படியான சிறு சிறு சந்தர்ப்பங்களைகூட தவறிடாமல் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராக நாம் உரத்த குரல் எழுப்புவது அவசியமானது.
எமக்கு கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் எதிர்ப்பை தெரிவிப்பது நமது கடமை. இதையே தொழிலாக செய்வதாக கூறும் சில தமிழ் அமைப்புக்கள் கண்டும் கானாது இருப்பது கண்டிக்கப்பட வேண்டியதே.
No comments:
Post a Comment