கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாக சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தல் வாக்குப் பதிவுகள் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத முறையில் சுமுகமானமுறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் கள்ளவாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நண்பகலின் பின்னர் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாதென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தேர்தல் அதிகாரிகளை மிரட்டியிருப்பதாக தேர்தல் வன்முறைச் சம்பவங்களைக் கண்காணிக்கும் நிலையத்திடம் தேர்தல் அதிகாரி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
களுதாவெல பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வாக்காளர்களிடமிருந்து வாக்காளர் அட்டைகளைப் பலவந்தமாகப் பறித்துச்சென்றிருப்பதாக புளொட் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.
கிழக்குமாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் வாழைச்சேனைப் பகுதிக்குச் சென்று விபுலாந்தா வித்தியாலயத்தில்
தனக்கு வாக்குச்சீட்டுக்களைப் போடுமாறு போடுமாறு வேண்டுகை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் இன்று இடம்பெறும் தேர்தல்களின் போது வாழச்சேனை பகுதியில் 30 லொறிகளில் பிள்ளையான் குழுவினர் மதுபானப் போத்தல்களை இறக்கி தமக்கு வாக்களிக்குமாறு கூறி மதுப்போத்தல்களை மக்களுக்கு இன்று வழங்கிவருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு நகரப்பகுதியில் இன்று பிள்ளையான்குழுவினர் முஸ்லீம் இளைஞர்கள் இருவரை தாக்கியுள்ளனர். மட்டக்களப்பு பகுதியைச்சேர்ந்த க.தஸ்ரின் வயது 27 நவாஸ் வயது 32 ஆகிய இருவருமே பிள்ளையான் குழுவினரால் தாக்கப்பட்டவர்களாவர் இவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு காவல்பணிமனையில் இன்று முறையிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment