Tuesday, 20 May 2008

இலங்கையின் கடும் மனித உரிமை மீறல்களுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் விமர்சித்துள்ளது


கடுமையான மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சுயாதீனமான சட்டத்தரணிகளை நியமிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது தொடர்பாக ஆசிய மனித உரிமைகள் அமைப்பு தமது கவனத்தை செலுத்தியுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு இன்மை காரணமாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் நியாயத்தன்மை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் சாட்சிகள் பாதுகாப்பு சட்டமின்மை தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் அமையம் கோரியுள்ளது..இந்தநிலையில் குறித்த ஆணைக்குழுவிடம் உள்ள சில அடிப்படை குறைப்பாடுகள் இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் ஆசிய மனித உரிமைகள் அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடும் மனித உரிமைகள் தொடர்பான விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணையை கண்காணிக்கும் சர்வதேச முக்கியஸ்தர்களின் குழு செய்த பரிந்துரைகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் ஆசிய மனித உரிமைகள் அமையம் சுடடிக்காட்டியுள்ளது.

No comments: