Tuesday, 20 May 2008

குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களை தேடி காவற்துறையினர்

motorcycle.jpgகுண்டு பொருத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை தேடி கொழும்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெடிக்குண்டுகளை பொருத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கொழும்புக்கு நுளைந்துள்ளதாக புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வெடிப்பொருள் பொருத்தப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் காவல்துறையினர் உட்பட 13 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: