Tuesday, 20 May 2008

இராணுவப் பயிற்சியாளர் தந்திரிமலையில் சுட்டுக்கொலை

தந்திரிமலை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியாளரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் துப்பாக்கி சூட்டுக் காயங்களுக்குள்ளான இந்த பயிற்சியாளர் தந்திரிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் 35வயதான கோப்ரல் என். தஸநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் சுமார் 50 பேர் வரையில் இருந்தும் இவரை சுட்டவர் யார் என்பதை பொலிஸாரினால் உறுதிசெய்ய முடியவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் முழு அளவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் பயிற்சியில் பங்குபற்றியவர்களின் துப்பாக்கிகள் விசாரிக்கப்பட்டன என்று இன்னுமொரு செய்தி தெரிவிக்கிறது.

No comments: