Tuesday, 20 May 2008

தலதா மாளிகைக்கு பிள்ளையான் விஜயத்துக்கு முன்னாள் தியவதன நிலமே கடும் கண்டனம்

கண்டியிலுள்ள சிறி தலதா மாளிகைக்கு கிழக்கு மாகாணத்துக்கான முதலமைச்சர் பிள்ளையான் விஜயம் செய்தபோது அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமே நிரஞ்சன் விஜயரட்ண வன்மையாகக் கண்டித்திருக்கின்றார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், பிள்ளையானுக்கு அங்கு எந்தவித வரவேற்பும் வழங்கப்பட்டிருக்கக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை தலதா மாளிகைக்குச் சென்ற பிள்ளையான் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பௌத்த மதத்தின் உயர் பீடங்களாகவுள்ள மல்வத்த, அஸ்கிரிய பீடங்களுக்கும் சென்று மகாநாயக்க தேரோக்களிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.

இருந்த போதிலும் இhனை முன்னாள் தியவதன நிலவே கண்டித்திருப்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என மகாநாயக்கர்களில் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

சிறிலங்காவின் அரசியலைப் பொறுத்தவரையில் இங்கு பௌத்த மதத்தின் செல்வாக்கு அதிகமாக இருப்பதால், புதிதாகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் அரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் கண்டியில் தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடு நடத்துவதும், பின்னர் மகாநாயக்கர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதும் வழமையான ஒரு நிகழ்வுதான். அதனையேதான் இப்போது பிள்ளையானும் செய்துள்ளார் என அரசியல் விமர்சகர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.

No comments: