மட்டக்களப்பு அரசடி சந்தியில் காவல்துறை சிப்பாய்; ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று மாலை 6.15 அளவில் இனம்தெரியாத நபர்களால் சுடப்பட்ட இவர் எம் தஸநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத்தேர்தலின் பின்னர் மட்டக்களப்பு நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும நான்கு காவல்துறையினர் ; இதுவரை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனனர். தேர்தலின் பின்னர் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தின் முன்பாக நின்ற காவற்துறை சிப்பாய் சுடப்பட்டமை குறித்து ஐக்கியதேசியக் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது. பொலநறுவையைச் சேர்ந்த இந்த காவற்துறைச் சிப்பாயை பிள்ளையான் அணியினரே சுட்டுக் கொன்றதாக எதிர்க்கட்சித் தலைவர் றணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment