Tuesday, 13 May 2008

பிள்ளயான்,கிஷ்புல்லா முதலமைச்சர் கனவிற்கு ஆப்பு,கிழக்கு மாகாண முதலமைச்சராக மௌனகுருசாமி?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பாக பிள்ளையானுக்கும், ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள போட்டி நிலை இனப்பிரச்சினைக்கு வழியமைக்கக்கூடும் என்பதால் வேறொருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரியவருகிறது.

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர், 4 அமைச்சுப் பதவிகள், தவிசாளர் உள்ளிட்ட பிரதான 6 பதவிகளையும் இன விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஸ தலைமையில் இந்தப் பதவி நியமனங்கள் குறித்து விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைப்படி, இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மௌனகுருசாமியை முதலமைச்சராக நியமிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

மௌனகுருசாமியை கிழக்கு மாகாணசபையின் பிரதான பொறுப்பொன்றிற்கு நியமிக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போனஸ் ஆசனங்களில் ஒன்றிற்கு மௌனகுருசாமியை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் மௌனகுருசாமி போட்டியிட்ட போதிலும் உறுப்பினர் பதவி கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பின் கீழ் மௌனகுருசாமி காணப்படுவதாகத் தெரியவருகிறது.

1 comment:

Ganeshan said...

Whoever comes makes no difference as he is going to be,"HIS MASTER'S VOICE". Just a tool who will execute the programme of annihilation of the Tamils. This Provincial Govt. will not last after the Tigers take over Jaffna. Govt has failed to advance even an inch in the Tigers held areas.
May God Bless the TIGERS WIN OVER SOON.