இந்து மக்களின் முக்கிய ஆலயமாக விளங்கிய கதிர்காமம் தற்போது பௌத்த மக்களின் பிரதான வழிபாட்டு தலமான "கதறகமவாக' மாறியுள்ளது என்று பிரபல பத்திரிகை ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.
முத்தையா தெரிவித்தார்.
தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடைபெற்ற வெசாக் உற்சவ பேருரைக்கு முன்னுரை வழங்கி உரையாற்றிய எஸ். முத்தையா மேலும் கூறியதாவது, புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெற் றமை, இறப்பு உள்ளிட்ட அவரது கொள்கை களை வெசாக் பூரணை தினம் எமக்கு உணர்த்துகின்றது.
பௌத்த மதமானது வாழ்க்கைக்கான கல் வியாகவும் வாழ்க்கை முறையாகவும் உள்ளது. அசோக பேரரசனினால் பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
நாம் இலங்கையில் வாழ்ந்தாலும் இந்தி யாவில் இருந்தாலும் இந்திய குழுவாகவே செயற்படுகின்றோம். ஏனெனில் எமது மொழி, மதம், கலாசாரம் என்பன இந்தியா வுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
முன்பு, எனது சிறு வயதில் கதிர்காமக் கந் தன் ஆலயத்துக்கு கால்நடையாக சென் றுள்ளேன்.
இந்துக்களின் முக்கிய தலமாக விளங்கிய கதிர்காமம் தற்போது பௌத்தர்களின் பிர தான வழிபாட்டுத்தலமாக மாறியுள்ளது.
எனினும் இந்துமக்கள் அங்கு வழிபாடு நடத்தி வருகின்றனர் என்றார்.
"மெட்ராஸ் மியுஸிங்' மற்றும் "குரோணிக் கலர் ஒவ் சென்னை' ஆகிய பிரசுரங்களின் ஆசிரியரான எஸ். முத்தையா, முன்னர் ரைம்ஸ் ஒப் சிலோன் பத்திரிகையில் வெளி நாட்டு செய்தி ஆசிரியராகவும் பின்னர் சிறப்பு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஊடகத் துறை சார் உயர் கல்வியை மேற்கொண்ட முத்தையா, கல்லூரியொன்றில் ஊடகத்து றைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
Sunday, 18 May 2008
இந்துக்களின் முக்கிய தலமான கதிர்காமம் தற்போது பௌத்தர்களின் "கதறகம'வாக மாறியுள்ளது!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment