மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்ட இரு மாணவிகள் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாலை மற்றும் பட்டியடிச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கல்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்ட இந்த மாணவிகளை கல்குடா பொலிஸார் மூலம் வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு மாணவிகளும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment