களுத்துறை கொச்சிக்கொட்டுவெவைப் பகுதியை பிறப்பிடமாக கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையும் முச்சக்கரவண்டியின் சாரதியுமான முஸ்லிம் ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என அவரது மனைவியினால் மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கை, தொழில், தொழில் நுட்ப பயிற்சி பிரதியமமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடமும் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
துவான் இம்தியாஸ் மொஹமட் அல்லது டோனி (வயது44) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டிருப்பதாக மனைவி பதுர்நிஷா தெரிவித்துள்ளார். 16ம் திகதி இரவு 11.30 மணியளவில் சிவில் உடை அணிந்திருந்தவர்களே தனது கணவனை கூட்டி சென்றதாகவும் அவர் தெரிவித்தார். அவர் தனது புகாரில் மேலும் தெரிவித்ததாவது எனத கணவரை டோனி என்பார்கள் கொழும்பைசேர்ந்த எனக்கும் களுத்துறையை சேர்ந்த டோனிக்கும் நான்கு பிள்ளைகள் உள்ளனர் கொழும்பு குணசிங்கபுரயில் வசித்து வந்த நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன்பாக களுத்துறைக்கு வந்தோம் சொந்தமாக முச்சக்கரவண்டியை அதன் மூலம் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்திய எனது கணவருக்கு வெளியூரில் தொழி;ல் புரியும் தங்கையின் கணவர் வான் ஒன்றை வாங்கி கொடுத்ததை அடுத்து அவர் வான்சாரதியாக பணிபுரிந்தார்.
கடந்த 16ம் திகதி இரவு 11.30 மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்த மூவர் தாங்கள் கொழும்பில் இருந்து வந்ததாகவும் டோனி தங்களது வாகனத்தை சேதப் படுத்தியதாகவும் தெரிவித்து சேதமடைந்;த வாகனத்தை பார்க்க வருமாறு பலவந்தமாக அழைத்தனர். தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று கணவர் வாதாடினார் அப்போது வாகனத்தை பார்க்கும்படி இழுத்து சென்றனர் வானுக்கு இலக்கத்தகடு இருக்கவில்லை நானும் எனது கணவரும் அநாதையாகி யுள்ளோம் எனது கணவரை ஏன் கடத்தினார்கள்? என்று தெரியவில்லை என்று தனது முறைப்பாட்டில் மனைவி தெரிவித்துள்ளார்.
Sunday, 18 May 2008
நான்கு பிள்ளைகளின் தந்தை களுத்துறையில் கடத்தப்பட்டார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment