கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற பயங்கவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அங்குள்ள நேத்தாந்தீவு பகுதியில் வசித்து வந்த பெண்ணொருவரை தொலைபேசி உரையாடலை அடிப்படையாக வைத்து கைது செய்து கொழும்பிற்கு கொண்டு வந்துள்ளனரென பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்னனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது சன்முகநாதன் கலைவாணி (வயது32) என்ற ஒருபிள்ளையின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார.; இந்த விடயம் தொடர்பில் பிரதியமைச்சரின் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டவை பின்வருமாறு பெண்ணின் கைது குறித்து அவரது தாயார் முறையிட்டுள்ளார். கடந்த 25ம் திகதி இரவு வெள்ளை வானில் வந்தவர்களால் தங்களை பொலிஸார் என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொலைபேசி இலக்கத்தை கலைவாணியிடம் காண்பித்து சீராளசிங்கம் என்பவருடன் உரையாடியமை தொடர்பாக விசாரித்தார் என்றும் கலைவாணியின் வீட்டில் அவருடன் வேறு சிலரும் அகதிகள் என்ற பேரில் தங்கியிருந்தனர் என்றும் குறித்த நபருடன் உரயாடியதை கலைவாணி ஒப்புக் கொண்டதையடுத்து இரவோடு இரவாக அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்து சென்று தடுத்து வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். கணவனை இழந்த கலைவாணிக்கு 15வயதில் மகள் ஒருவர் இருக்கிறார் என்றும் கடந்த ஜனவரிமாதம் அவருக்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டது என்றும் தாய் கூறினார். கலைவாணி வீட்டில் இருந்தவர்கள் உறவினர்கள் அல்லர் என்றும் தற்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தமக்கு தெரியாது என்றும் தயார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக பிரதியமைச்சர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு இயக்குனர் நந்தன முனசிங்கவுக்கு அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Thursday, 15 May 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment