Friday, 16 May 2008

வன்னியில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் வானூர்தி வன்னியில் உள்ள இரணைமடு வானூர்தி ஓடுபாதையை அண்டிய பகுதியில் பறப்பில் ஈடுபட்டதாக சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னி வான்பரப்பில் வான் புலிகளின் வானூர்தி மேல் எழுந்ததும், அது படையினரின் ராடார் திரைகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறிது நேரத்தில் அது ராடார் திரைகளில் இருந்து மறைந்துவிட்டது. வானூர்தி மீண்டும் தரையிறங்கியதனால் அது ராடார் திரைகளில் இருந்து மறைந்திருக்கலாம் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

No comments: