Sunday, 18 May 2008

" ஒசாமா பின் லேடனுக்கு எதிராக போர் புரிந்து கொண்டே,விடுதலைப் புலிகளுடன் போர் புரிய வேண்டாம் என மேற்குலகம் இலங்கையிடம் கேட்கின்றனர்" -பிரதமர்

மேற்குலகம் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முன்கொண்டு செல்லும் நாடுகளே, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என இலங்கையை அச்சுறுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாகிஸ்தான் தூதரகத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

"அவர்கள் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக போர் புரிந்து கொண்டே, உலகின் முக்கிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுடன் போர் புரிய வேண்டாம் என இலங்கையிடம் கேட்கின்றனர்" எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கத்தேய நாடுகள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும,; பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையெனவும், பயங்கரவாத நடவடிக்கை காரணமாகவே அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையைப் போன்று பாகிஸ்தானும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

No comments: